Friday, October 23, 2009

CHECKING.
I AM NOT GETTING SHOWING SOME ERROR

Tuesday, June 09, 2009

the bliss of sixty !

Dear friends,
This day , 9th June is a wondeful occasion for me ,
it is my 60th birth day.
I have been crossed several milestones, but even just keeps looking for more challenges.
Infact it is great to be sixty.
I request your great wishes , greetings, blessings for enjoying the bliss of sixty !
Regards,
A.Sugumaran

puducherry
09345419948

Saturday, April 18, 2009

எனக்கு புரிந்தது இதுவே ! (4)----


எனக்கு புரிந்தது இதுவே ! (4)----
மூச்சு !

பிறப்பின் முதல் மூச்சில் தான் பிறவி தொடங்குகிறது !

பிறப்பின் இறுதி மூச்சில் தான் இறப்பின் தொடக்கம் !
ஆனால் இந்தப்பிறப்பும் இறப்பும் நாளும் தொடர்கிறது !

நாளுக்கு நாம் விடும் சுவாசம் 21600 மூச்சு ,

அத்தனை மூச்சும் ஆவதுதான் நாள் ஒன்று !

ஒவ்வொரு நாளும் அவன் இடும் மூச்சில்

உள்ளே இழுப்பது பிறப்பு !

வெள்யே இடுவது இறப்பு !

இது தொடரும் வினை ,மூச்சடக்குவதும் ,

வெளியிடுவதும் முழுவதும் அவன்செயலாகும் !

மூச்சு விடுவது காற்றை

இழுத்து விடுவது மட்டும் தானா !

மூச்சினிலே தான் இருக்கு

வாழ்வின் ஸுச்சுமம் !மூச்சி விடுதல் தான்

வாழ்தலின் அடையாளம்
மூக்கின் இரு துளை வழியே

அரைமணிக்கொருமுறை

லயம் தப்பாமல் மாறிடும் மூச்சு !


வலது புற மூச்சுக்கு சூரியகலை

இடதுபுற மூச்சுக்கு சந்திர கலை !
சூரியகலையும் சந்திரகலையும் !

அர்த்தர்மறிந்து பிரயோகிக்கத்தேரிந்தால்

வாழ்வின் அர்த்தத்தையே மாற்றிவிடலாம் !


வாழவின் போக்கு நமது மூச்சிலே தான் !
தாறுமாறான மூச்சினால் தான் பூர்வஜன்ம

வினைகளும் ,தொடர்ந்து வரும் இன்ப துன்பங்கள் ,

மனத் தடுமாற்றம் குழப்பங்கள் ,வறுமை முதலிய

அவலங்கள் தொடர்ந்து வந்து நம்மை தாக்குகின்றன !

எதைஎதையோ பிறந்ததும் சொல்லித்தரும்

நமக்கு மூச்சு விடுதல் பற்றி மட்டும்

ஏனோ யாரும் சிரத்தை எடுப்பதில்லை !
மூச்சை அறிந்தவன் தான் யோகி !


இயற்கையை மூச்சிலே நட்புகொள்ளலாம் !

குளிர் அடிக்குதா ? வலதுபக்கம் மட்டும் மூச்சு ,

அதுவே சூரிய கலை ! சூடாகிடும் ஐந்தே நிமிடத்தில் !
தாக்கிடும் அந்த வெப்பமா ? பிடித்திடு இடது பக்க மூச்சி

குளிர்தே விடும் உடம்புதான் ஐந்து நிமிடத்தில் !


ஆண் மகவு வேணுமா ?சூரியகலை

நடைபெறும் போது உறவு கொள்ள !
ஆசையுடன் பெண் மகவு வேண்டிடின்

சந்திரக் கலை நடைபெறும் காலம் உறவுக்கு உகந்த காலம் !

ஆயிடினும் கூடுதலுடன் ஐம்பூத ஆற்றல் இனைய வேண்டும் !
இத்தகு மூச்சிதனை வயப்படுத்தும் பயிற்ச்சிதான் பிராணாயாமம் ! அது மூச்சுடன் பிராணனையும் வயப் படுத்தும் வழியாகும் ।!பிராணனை உணர்ந்தால் எதுவும் சாத்தியம் !


அளவில்லாது விடும் மூச்சிக்காற்றை அளவுடன் கணக்கிட்டு ,காலஅளவுடன் சுவாசிப்பதே பிராணாயாமம் ! குறைவாகவும் மெதுவாகவும் மூச்சு , ஆயுள் பெருக்கம் !
வாழும் இந்த பிரபஞ்சம் தோன்றுவதும் இந்த ஆகாயத்திலே ,ஒடுங்குவதும்இந்தஆகாயத்திலே!இந்த ஆகாயமோ பிராணசக்தி ! எங்கும் வியாபித்துள்ள இந்த சக்தியே பிரபஞ்சத்தின் இயக்கமாகும் !
இன்னும் பல இருக்குது மூச்சினிலே !அது இதன் அடுத்த பகுதியிலே !
அன்புடன் ,ஏ சுகுமாரன்

Thursday, April 16, 2009

எனக்கு புரிந்தது இதுவே ! (3)----


எனக்கு புரிந்தது இதுவே ! (3)----
பிறப்பு
நம் இச்சையால் நாம் பிறக்கவில்லை

இறப்பும் நம் வசம் இல்லை

பற்ப்பலபிறவியின் கர்ம வினைகளின் தொகுதியும்

சத்வம் ரஜோ தாமோ எனும் முக்குண நிலையால்

உருவான வாசனையாலும்

வந்து முளைத்தது இப்பிறவி !

நமது தாய் தந்தையை நாம் தேர்ந்தெடுக்வில்லை !

அவர்களும் நம்மை வேண்டி இருக்கவில்லை !

பின் எதுதான் பிணைத்தது !பிணைப்போ தொடர்வது

இன்று நேற்றல்ல கொடுக்கல்வாங்கல்

தீரும் வரை தொடரும் பந்தம் !ஆனால்

பாத்திரங்கள் தான் மாறுகின்றன !

நம் தாய் தந்தை நமக்கு தரவேண்டிய

தீர்க்க வேண்டிய கடனை சரிசெய்ய

நாம் அவர்களுக்கு பிள்ளையைபிறக்கிறோம்

அந்த கொடுக்கல் வாங்கல் தீரும் வரை

இருவர் தொடர்பும் தொடர்திடும்

பிறவி பிறவியாக அறுபடாமல் !

நமது சகோதர சகோதரிகளும் நண்பர்களும்

தொடர்பு கொள்ளும் அத்தனை

அத்தனை பேரும்ஒன்றும் தற்செயல் இல்லை !

நம் ஆயிரம் ஆயிரம் பிறவியிலே அறுபடாமல்

தொடரும் தொடர்புகள்தான் ! தீரும் வரை

கடன் பெற்ற ஊரும் நபர்களும்

தட்டாமல் வந்தே தீரும் ।!


இறைவனின் மாயா சக்தி இயற்க்கை

மாயை என்றால் இல்லாமல் இருப்பது அல்ல

இருப்பதுவே இல்லாமல் இருப்பது !

இயற்கையின் பிரதிநிதி சந்திரன்

பரமனின் பிரதிநிதி சூரியன் !

பிறப்பின் ஆதாரம் பரவிந்து ,நாதம்

உடல் எடுக்க வேண்டிய உயிர்

சூரிய சந்திர கதிர்கள் மூலம் பரவி

உண்ணும் உணவின் மூலம்

அவன் தாயின் உடலில் பரவி ,

தந்தையின் பிராணனின் உந்துதலுக்கு காத்திருக்கும் !

பிறப்பின் ஆயுள் புகும் பிராணனின்

அளவைப்பொறுத்தே அமைகிறது !

"உறவின்" போதே வாழும் காலம்

ஆரோக்கியம் ,வாழும் வழி நிச்சயம்

ஆகிவிடுகிறது ।! ஓம்கார நாதம்

பிறவிக்கு அடிப்படை நாதம் !


செய்த அந்த நல்வினை தீவினை

அவன் பெறும் பிறவியில்

அவனது தாய் தந்தை அமைவதும்

உடலின் வண்ணமும் ,குணமும்

சுக துக்கமும் அமைவதாகும் !

கழிந்த பிறவியில் வறியவனாக இருந்தும்

வாழ்வில் சத்தியத்துடன் ,சகிப்புடன்

தான் உண்ண வழி இல்லாமல் இருந்தும்

தன் ஸ்தரமத்தை சரிவர்செய்தவன் ,

பிறர் பசி தீர்த்தவன் பெறுவது ஒரு புதிய பிறவி
அதில் உத்தம தாய் தந்தை

ஆரோக்கிய அமைதியுடன்

அவன் சஞ்சித கர்மம் தீர்க்க நிமதியான

ஒரு சுழல் !மாறாக உத்தம சுழல் அமைந்தும்

அதர்மமாக அடக்கமில்லா லோபியாக வழ்தவன்

அடைவதோ தரித்திர குடும்பம் தீராத நோய் பிறர் பழிப்பு !

ஆயினும் அவன் பிறவியின் நோக்கம்

மீதம் இருக்கும் சஞ்சிதம் தான் !

அதாவது ஒருவன் பயணம் மூன்றாம் வகுப்பு

நெருக்கடி துன்ப ரயில் பயணம் !மற்றது

குளிர்சாதன இன்ப முதல் வகுப்பு ரயில் பயணம் !

ஆனால் போவது என்னவோ ஒரே ஊருக்குத்தான் !

பிறப்பின் ஆரம்பம் அவன் விடும் முதல் மூச்ச்தான்
அது அடுத்து வரும் பகுதியிலே !
அன்புடன் ,

ஏ சுகுமாரன்

Wednesday, April 15, 2009

எனக்கு புரிந்தது இதுவே ! (2)




எனக்கு புரிந்தது இதுவே ! (2)----

ஒரு வழியாக விரோதியாண்டு புலர்த்துவிட்டது

குழப்பத்துடன் வாழ்த்தியும் முடித்தாகிவிட்டது

நானும் ஒரு விரோதி ஆண்டு ஆள் தான் ।

விரோதியில் பிறந்த நண்பன் நான்

விரோதிஎன்றல் பகைத்துக்கொள்। !

எதனுடன் பகைத்து கொள்வது ?


புத்தாண்டு முடிவு ஏதாவது வேண்டுமே !

எதையாவது பகைத்துக் கொள்வோமே ?
இனி சேர்ந்தாரை கொள்ளும் இந்த சினத்துடன் பகைமை

அது செல்லும் சினம் ஆனாலும் சரி

செல்லாவிடத்து சினம் ஆனாலும் சரி

அதனுடன் பகைமை கொள் !

ஆசையுடன் கிளர்த்ந்து வரும்

அழுக்காறுக்கு விரோதி நான் !

அறியாமை எனும் மூலமதில் முளைத்து வரும்

அச்சத்திற்கு விரோதி நான் ! அம்மட்டோ

அறியாமையினால் சாதி என்றும் ,மதமென்றும்

மூண்டெழும் பகைமைக்கும் விரோதி நான் !

வாழ்கைஎனும் யோகத்தை அறிய விடாமல்

ஒட்டியிருக்கும் அஞ்ஞான பேய்க்கு நான் விரோதி !
முனேற்ற பாதைலே சாதனை படைக்க

நாம் என்னவாய் இருக்கிறோமோ

அதற்கும் என்னவாக விரும்புகிறோமோ ?

இடையில் உள்ள தூரம் அதை குறைக்க

எண்ணும் போது வந்து வாய்க்கும்

மடிஎன்னும் சோம்பலுக்கு விரோதி நான் !


காதலில் மட்டுமா இரண்டு வகை ?

வெற்றியிலும் இரண்டு வகை உண்டு

சைவமுண்டு அசைவமுண்டு !

சைவ வெற்றி நிதானமானது ,பொறுமையானது !

செல்லும் வழியும் சிர்மை கொண்டது ।

விரைவில் கிடைக்கும் என்றாலும்

வேண்டவே வேண்டாம் அசைவ வெற்றி !



போகும் இடத்தை விட

போகும் பாதை தான் முக்கியம்

என்பது தானே காந்தியின் வாக்கு ।!

காசிக்கு போக எண்ணி சேற்றை பூசிக்கொண்டு

ஆயிரம் பசுவை கொன்ற பாவத்துடன்

புனித காசிக்கு போய் செய்வது தான் என்ன ।?

அந்த அசைவ வெற்றிக்கு விரோதி நான் !


தவறான காரியத்தை செய்ய

எந்த சரியான வழியும் இல்லை !

முடிவு சரியோ இல்லையோ !

போகும் பாதை சரியாக இருக்கவேண்டும் !
அகங்காரத்தையும் ,அகம்பாவத்தையும்

வளர்க்கும் முட்டாள் தனத்திற்கு விரோதி நான் !

அகம்பாவம எதிரியைத்தரும்

அகங்காரமோ அறிவை மறைக்கும் !!


பலரும் பகர்வர் கடைசி காலத்தில்

இன்ப்மாக இருக்க இப்போ கஷ்ட்டப் படுவதாக ?

கஷ்ட்டப் பட்டு பணம் சேர்த்தபின்

பலருக்கு கடைசி காலம் இருப்பதில்லை !


பலதும் படைத்த கடவுள்

பணத்தை மட்டும் தான் படைக்கவில்லை !

இறைவனின் இயற்க்கை நியதிகள்

எதுவும் பணத்தை மட்டும் கட்டுப்படுத்துவதில்லை !


செல்வமென்று சொன்ன பெரியவர்கள்

அதை எட்டுவகை என்று சொன்னார்கள்

அஷ்ட லக்ஷ்மியில் ஏழு இருந்தாலும்

அந்த தனலஷ்மி இல்லையெனில்

அவன் பெயர் வறிய்வந்தான்!


இத்தனை மூடத்தனதிர்க்கும விரோதி நான் !


பலர் சொல்வது போல் எல்லா மனிதனும் கடவுள் இல்லை !

ஆனாள் எல்லா மனிதருல்லேயும் கடவுள் இருக்கிறார் !

அவனைக் காண ,ஞானத்தைப் பெற

பரந்த கல்வியிலோ வாதப் பிரதி வாதத்திலோ இயலாது !

மிகப் பெரியக் காட்டை ,மரத்தின் உச்சியில்

இருந்து தீக்குச்சி வெளிச்சத்தில் காணமுடியாது !

யோகம் என்னும் தீபத்தில்

ஞான சூரியன் மட்டுமே ஆன்மீகக் காட்சியை காட்ட முடியும் ।!


குப்பையிலே கிடந்தாலும் மாணிக்கத்தின்

பெயர் மாணிக்கம் தான் ! அஞ்ஞான முடர் பலர்

அடையாளம் காணமாட்டார் !

அன்பு ஆனந்தம் ,அமைதி ,பொறுமை ,

இரக்கம் வாய்க்கப பெற்றோர்

எங்கிருந்தாலும் சான்றோர் !

கடவுளின் மைந்தர் தான் !


அன்புடன் ,ஏ சுகுமாரன்

Sunday, April 12, 2009

எனக்குப புரிந்தது இதுவே


எனக்குப புரிந்தது இதுவே


யாருடனும் உன்னை ஒப்பிடாதே !

ஒவ்வருவரும் அவரவர் நிலையில் தனித்தனியே !
நீயும் உன் மகனும் கூட வேறு வேறுதான்

அவரவர் வினையை போக்கி

ஞானம் பெற அவரவர் வருகிறார்கள் !
உன்கடமை உனது பாத்திரம் இப்போது தந்தை !
கொஞ்ச நாளுக்கு முன் நீயே மகன் பாத்திரத்தில் இருந்தாய் !

இருக்கும் வரை கொடுத்த பாத்திரத்தை குறைவர செய்வதே சுதர்மம் !
இதில் மற்றவருடன் உன்னை ஒப்பிடுவது நாடகத்தில்
அடுத்தவர் வசனத்தை நீபேசுவது போல் !,
அது உன் பணிஅல்ல் !
அது உன்னையே நீ அவமதித்து கொள்வது ஆகும் !


சுதர்மத்தில் வரும் தடைகளை எண்ணி அதிகம் கலங்காதே !
எங்காவது சாவி இல்லாது பூட்டு செய்கிறார்களா ?
எந்த பிரச்னையும் தீர்வுடன் தான் வருகிறது !
சில சமயம் சாவியை மறந்து விட்டு தேடுவது போல் ,
பல சமயம் நாம் தீர்வை தேடி அலைகிறோம் !
எப்போதும் தீர்வு ,பிரச்சனைக்கு அருகில் தான் இருக்கும் !
பிரச்சினையை ஊன்றிப் பார் !


நீ சோகமாக இருந்தால் வாழ்க்கை
உன்னைப் பார்த்து சிரிக்கிறது ,
கையால் ஆகாதவன் என்று !
நீ சந்தோஷமாக இருந்தால்
வாழ்க்கை உன்னைப் பார்த்துமகிழ்கிறது !
நீ மற்றவரை சந்தோஷப் படுத்தினால்
வாழ்க்கை உன்னைவாழ்த்துகிறது ! வணங்குகிறது !


ஒவ்வொரு வெற்றி பெற்ற மனிதனின்
பின்னணியிலும் அவன் ஏறிவந்த
ஒரு கடினமான சோகக் கதை இருக்கும் !
ஒவ்வொரு துயரக் கதைக்கும் நிச்சயம்
ஒரு வெற்றிகரமான முடிவிருக்கும் !
நீ அந்த சுழற்ச்ச்யில் எங்கு இருக்கிறாயோ !
கஷ்டத்தை ஒப்புகொள் ! வெற்றிக்கு தயார் ஆகு !


மற்றவர் செய்யும் தவறுகளை பேச நமக்கு ரொம்ம ஆசைதான் !
ஆனால் நம்ம தவறுகளை நாம் உணர நமக்கு நேரமில்லை !
அதை தெரிந்து கொள்ளும் கடைசி ஆளாக நாம் தான் இருப்போம் !
அனைவருக்கும் தெரிந்த பிறகுதான் நமக்கு புரியும் நம் தவறுகள் !

அப்போது தெரிந்து கொண்டும் பலன் இராது !
சுற்றி யாரும் இருக்க மாட்டர்கள் நம்மை தொந்தரவு செய்ய !
தனிமையில் தான் இனிமை !

உஷாராக நாம் காலுறை அணிவது தான் புத்திசாலித்தனம் !
சாலை முழுவதும் முள் இல்லாது கமபளம்விரிக்க முடியுமா ?
ஊரை திருத்தப் போவதை விட
நம்மை திருத்திக் கொள்ளவது மிக சுலபம் !


யாரும் காலத்தின் பின்னல் சென்று நடந்த நிகழ்வின்
மோசமான ஆரம்பத்தை மாற்ற முடியாது !
எனவே சென்றதை எண்ணி செயலிழக்க வேண்டாம் !
ஆனால் யாராலும் புதிய ஒரு மாற்றத்தால்
ஒப்பில்லாத சந்தோஷ முடிவை அடைய முடியும் !

முடிந்து விட்ட பிரச்னையை பற்றி வருந்தி என்ன பயன் ?
ஒரு பிரச்சனை முடியாது என்றால்
அதைக் குறித்து புலம்பி என்ன பயன் !
நம்மை தேடி வரும் பிரச்னையை
மகிழ்வுடன் எதிர்கொண்டு
சந்தோஷத்துடன் வழியனுப்பு !
அதில் நீமட்டும் பட்டும் படாமல் இருக்க பயின்று கொள் !


தவறவிட்ட வாய்ப்புகளை எண்ணி
கண்ணீரால் கண்களை குளமாக்காதே !
எதிரில் வந்து நிற்கும் நல்ல ஒரு புதிய வாய்ப்பை
அந்தக் கண்களின் கண்ணீர் மறைத்து விடக்கூடும் !


முகத்தை மட்டும் மாற்றினால்
ஏதாவது மாற்றம் வருமா ?
மாற்றத்தை எதிர்க் கொள்ளும்
முகம் தான் மறுமலர்ச்சி தரும்
யாரைப் பற்றியும் குறையில்லை ,
நாம் மாறினால் போதும் ,
வாழ்வின் இனிமைக்கு
பிறரை சார்ந்து இராதீர்கள் !
மற்றவர் அயிபிராயம் உங்களுக்கு
உங்கள் மன நிமதிக்கு
நிச்சயம் தேவையானால்
நீங்கள் மகிழ்ச்சி கொள்ள வாய்ப்பே இல்லை !

மற்றவர்களுஉகு வேறு பல வேலை உண்டு
உங்களை மக்ழ்விப்பதை தவிர ! -


------------------------------------------
இது முதலில் கவிதை அல்ல !

இதை நான் எந்த புத்தகத்தை பார்த்தும் நகல் எடுக்க வில்லை !

நான் நடந்து வந்த பாதையில் கண்டெடுத்த கற்கள் இவை !

பாதத்தில் தைத்த்தில் சில வைர கற்களும் உண்டு !

இந்த கருத்துக்கள் எதுவும் புதியது இல்லை !

பலரும் பகர்ததுவே !

கொள்வோர் இருப்பின் தொடரும் உத்தேசம் உண்டு !

'வேகம் கெடுத்தாண்ட வேந்தனடி வெல்க ! '


'வேகம் கெடுத்தாண்ட வேந்தனடி வெல்க ! '

----ஏ சுகுமாரன்


இது திருவாசகத்தில் சிவபுராணத்தில் வரும் ஒரு புகழ் பெற்ற வைர வரிகள் ।
இதில் வேகம் என்று மாணிக்க வாசகர் எதை குறிப்பிடுகிறார் ,

வேகமேன்பது நாம் நடை முறையில் குறிப்பிடும் தூல பொருளின் வேகமா ?
நாம் நடை முறையில் செய்யும் காரியங்களில் இருக்கும் வேகம்மா ?அல்லது ராஜச நிலையில் இல்லாது தாமச நிலையில் வேகம் இல்லது இருக்கச்சொல்கிறாரா ?

மேலும் இறைவனை வேகம் கெடுத்த வேந்தன் என்கிறார் ,
ஆக வேகம் கெடுப்பது இறைவனின் சிறப்பா ? அவர் காரியத்தில் வேகம் இல்லாது அமைதியாக செய்ய வேண்டும் என்கிறாரா ?

புலன்களின் வேகத்தைக் குறைக்கச் சொல்கிறாரா ?
அதைத்தான் கள்ள புலன்கள் என்று வேறு இடத்தில் கூறுகிறாரா ?

அல்லது அந்தக் காரணங்களான புத்தி ,மனம் சித்தம் அகங்காரம் இவைகளின் வேகம் குறைய வேண்டும் என்கிறா ?

கண்ணுக்கு தெரியாத புலன்களின் வேகத்தை குறைக்கச் சொல்கிறாரா ?
தூல புலன்களின் வேகத்தை குறைக்கச் சொல்கிறாரா ?

ஆனால் கண்ணுக்கு தெரியாத புலன்களின் வேகத்தை குறைத்தாலே ,
புறப் புலன்களின் வேகம் தானே குறைத்துவிடும் !

எனவே மனோ வேகத்தை குறைத்து அல்லது அகற்றி என்னை ஆட்கொண்ட இறைவா என்கிறார் என்றுதான் கொள்ளவேண்டும் ।

மனம் தான் ஒளியைவிட வேகம் ஆயிற்றே ஒளியின் வேகம் 1,86,000 miles/sec என்றல் மனம் அதைவிட வேகமாக தான் நினைக்கும் பொருளை சென்று பற்றும் ஆற்றல் உடையது ஆயிற்றே ?

அந்த மனதின் வேகத்தை கெடுப்பது என்றால் என்ன ?

இந்த குரங்கு மனம் அங்கும் இங்கும் சென்று எதையும் பற்ற ஒரு எண்ணம் வேண்டும் ।
இந்த உள்ளத்தில் எண்ணம் என்னும் கொத்திப்பு ஓயாமல் பொங்கி வருகிறது ।எண்ணம் வரும் வேகம் தான் அதன் கொதிப்பு,
அந்த கொதிப்பை பொறுத்தே எண்ணம்
வேகம் வேகம் ஆக முளைத்து வருகிறது ।
எண்ணங்களை நிறைவேற்ற பிறவிகளும் பெரிகி வருகிறாது ।
இத்தகைய எண்ணங்களை ஓயாமல் உண்டாக்கும் கொத்திப்ப்தான் என்ன ?அதை உண்டாக்குவது எது ?

அந்தக் கொதிப்பை வேகத்தை உண்டாக்குவது ஆசை எனும் தீதான் !


எண்ணங்களுக்கு வலிவு கொடுப்பது ஆசைதான் ।
ஆகையால் ஆசையையே வேகம் எனலாம் !
மனதில் ஆசை என்னும் விருத்தி இருந்தால்
பந்த பாசம் என்னும் அழுக்கு உண்டாகும்
ஆசை அகன்றால் மனத்திற்கு மூலப் பொருள்
ஆன ஆத்ம தர்சினம் கிடைக்கும்
இந்த ஆசைக்கு இருப்பிடம் அஞானம் ।
இந்த அஞானம் அகன்றுடன்
ஆசை அகன்று விடுகிறது ।
அது அத்தனை சுலபமா ?
அந்த அஞானம் எப்படி அகலும் ?
இறைவனது அருள் கிடைத்ததும் அஞானம்அகலுகிறது ?
அது என்ன ஞானம் ?
அதை அருளும் இறைவன் எங்கே இருக்கிறார் ?
இதை யாரிடம் கேட்ப்பது ?
வீட்டில் உள்ளவரில் யார் வயதில் மூத்தவரோ அவர் கூறியததான்நாம் உண்மை சரி என்று எடுத்து கொள்ளவோம் ।
அப்படியே நமது பண்டைய முதுசெம் உபநிஷங்கள் என்ன கூறுகின்றன என்று பார்ப்போம் ।
ஹ்ர்தி ஹ்யேஷ் ஆத்மா !
இந்த ஆத்மாவானது ஹிர்தயத்தில் வசிக்கிறது
என்கிறது பிரச்நோபதிஷதம் 3-६
யோ வேத நிஹிதம் குஹாயாம் பரமே வியோமன் ! ஸ்மாஸ்னுதே ஸாவான் கர்மான் ஸ !
பரம ஆகாசமாகிய ஹிர்தய குகையில் வீற்றுஇருக்கும் பிருமத்தை யார் அறிகின்றானோ அவன் ஆசைகள் அனைத்தையும் நிறைவேறப் பெற்றவன் ஆகிறார் என்கிறது தைத்திரீயோபநிஷாதம் 2-1 கூறுகிறது ।
அதாவது வேகத்தை அடக்க எண்ணத்தை அடக்க வேண்டும் । எண்ணங்களின் கொதிப்பை அடக்க ஆசையை அடக்க வேண்டும்
ஆசையை அடக்க அஞானம் போகவேண்டும்
அஞானம் போக ஒரே வழி ஞானம் வரவேண்டும் ।
ஒளி வந்தால் தான் இருள் விலகும் !
வேறு வழி இல்லை ।
ஞானம் வர இறைவன் அருள் வேண்டும்
அந்த இறைவன் ஒவ்வொருவர் உள்ளத்தில் இருக்கிறான் ।
அவன் அங்கே இருக்கிறான் என்பதை
அந்த ஞானத்தை அறிந்த உடனே
அவன் ஆசைகளுக்கு அப்பால் பட்டவன் ஆகிறான் ।
அவன் வேகம் தானே குறைகிறது !
ஆழ்ந்த ஒரு அமைதி அவனை ஆட்கொள்கிறது
ஆனால் அறிவது என்பது பூரணமாக உணர்தலே !
இது வேகம் கெடுக்கும் வழி என மாணிக்க வாசகர் கூறுகிறார் ।
ஆனால் இந்தக் கூற்றை அப்படியே ஒப்புக் கொள்லாதவர்க்கு
இதில் சந்தேகம் உடையவர்களுக்கு நவீன விஞானம் மூளைப் பற்றி விளக்கும் போது என்ன கூறுகிறது என்று பார்ப்போம் ।
அது நமது முளை நான்கு நிலைகளில் வேலை செய்வதாக குறிப்பிடுகிறது ।
நமது மூளையின் முழு வேலையே அது விழிப்புணர்வில் இருப்பது தான் அந்த விழிப்புணர்வு அல்லது பிரக்ஞையின் மட்டங்கள் நான்காகப் பிரிக்கப்படுகிறது। இந்த வெவ்வேறு பிரக்ஞையின் மட்டங்களில் மூளை அலைகளின் இயக்கம் வெவ்வேறு அளவுகளில் உள்ளது।மேல் பரப்பில் உள்ள பிரக்ஞை அல்லது விழித்திருக்கும் போது இருக்கும் பிரக்ஞை, பீட்டா மட்டத்தில் இருப்பதாகக் குறிப்பிடப் படுகிறது. இந்த பீட்டா நிலையில் மூளை அலைகளின் இயக்கம் விநாடிக்கு 14 முதல் 21 சைக்கிள் என்ற அளவில் உள்ளது.அடுத்து ஆழ்மன பிரக்ஞையின் போது அதாவது கனவு நிலையில் உள்ள பிரக்ஞையின் போது உள்ள நிலை ஆல்பா மட்டத்தில் இருப்பதாகக் குறிப்பிடப்படுகிறது. இந்த ஆல்பா நிலையில் மூளை அலைகளின் இயக்கம் விநாடிக்கு 7 முதல் 14 சைக்கிள் என்ற அளவிள் உள்ளது.அடுத்து ஹிப்னோதெராபி வேலை செய்யும் நிலை அல்லது யோசனைகள் ஆற்றலுடன் செயல்படும் நிலையில் உள்ள பிரக்ஞை தீட்டா மட்டத்தில் இருப்பதாகக் குறிப்பிடப்படுகிறது. இந்த தீட்டா நிலையில் மூளை அலைகளின் இயக்கம் விநாடிக்கு 4 முதல் 7 சைக்கிள் என்ற அளவில் உள்ளது. இறுதியாக ஆழ்ந்த உறக்கத்தில் உள்ள பிரக்ஞை நிலை டெல்டா மட்டத்தில் உள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது. இந்த டெல்டா நிலையில் மூளை அலைகளின் இயக்கம் விநாடிக்கு 1.5 முதல் 4 சைக்கிள் என்ற அளவில் உள்ளது.மூளை முழுதுமாக இயங்குவதற்காகச் செய்யப்படும் பயிற்சிகள் பீட்டா நிலையிலிருந்து மிக சுலபமாக ஆல்பா மட்டத்திற்கும் பிறகு தீட்டா மட்டத்திற்கும் நம்மை ஏற்றி விடுகிறது. இதைப் புரிந்து கொண்டு விட்டால் நாம் தீட்டா நிலையை எய்துவதற்காக முழு முயற்சியை எடுத்து வெற்றி பெறுவோம்.தியானம் செய்யும் யோகிகள் மிக சுலபமாக அதி வேகத்தில் டெல்டா நிலையை அடைவதாக ஆராய்ச்சிகள் நிரூபிக்கின்றன.எனவே யோகம் ,தியானம் என்பதெலாம் நமது மூளையின் திறனை வேலை செய்யும் நிலை அல்லது யோசனைகள் ஆற்றலுடன் செயல்படும் நிலையில் உள்ள பிரக்ஞை தீட்டா மட்டத்தில் கொண்டு வருவதற்காக செய்யும் முயற்சிகளே .இதிலும் நாம் வேகத்தை குறைப்பதற்கே முயற்சி செய்கிறோம் .எனவே வேகம் கெடுவது நமது ஆன்மீக பயணத்தில் ஒரு படி முன் செல்வது தான் ஒவ்வொருவரும் ஒவ்வொரு மட்டத்தில் வேலை செய்கிறோம் ,அந்ததந்த மட்டத்திற்கு தகுந்த படி அதற்க்கு ஒத்த படி ஒரே உண்மையை ,புரியும் படி அவரவர் நிலைக்கு தகுந்ததா படி நமது பண்டைய ஞானிகள் விளக்கங்கள் கூறி வழி நடத்து கிறார்கள் .ஆயிராம் ஆயிரம் ஆண்டுகளாக நமது ஞானிகள் நமது பரிணாம நிலை மனித தோற்றத்தோடு மட்டும் முடியவதில்லை என்பதை புரிந்து கொண்டு ,நமது அடுத்த பரிணாம நிலைக்க்கு மனித இனத்தை கொண்டு போக ஓயாமல் உழைத்து வந்துள்ளனர் .இது இன்றும் வாழையடி வாழையாக தொடர்கிறது .இந்தியாவில் கும்ப மேளாவில் கூடும் சாதுக்கள் ,சாதகர்கள் எண்ணிக்கை ஒருக்கோடிக்கு மேல் .அதாவது நமது மக்கள் தொகையில் ஒரு சதவிகிதம் பேர் ஆன்மீகத்தொண்டில் தங்களை ஈடு படுத்தி மக்களை மேம்படுத்த , மனித குலத்தை ஒரு படி மேலே கொண்டுபோக ,மனிதனை தேவனாக்க உழைத்து வருகிறார்கள் .இது சாதாரணக் காரியமா ?வேறு எங்காவது இது சாத்தியமா ?
சும்மா இருப்பது ஒன்றும் சாதாரண காரியம் இல்லைங்க !'

வேகம் கெடுத்தாண்ட வேந்தனடி வெல்க !

Sunday, January 25, 2009

இன்று தை அமாவாசை ஆனால் முழு மதி வந்ததினம்


இன்று தை அமாவாசை ஆனால் முழு மதி வந்ததினம்
இன்று தை அமாவாசை ஆனால் அமாவாசையை முழு நிலவு ஆக்கிய அன்னை அபிராமியின் பக்தனுக்கு அருளும் மாண்பினை விளக்கும் காட்சி யொன்று எல்லா ஆலயங்களிலும் , திருக்கடவூர் அன்னை அபிராமியின் திரு முன்னும் நடப்பது வழக்கம் । அந்த நிகழ்ச்சியின் சிறு வரலாறு இதோ ।அபிராமி பட்டர் என்று பின்னாளில் அறியப்பட்ட சுப்பிரமணியன் என்ற அந்தணர் அபிராமி அம்மையின் மேல் மிகவும் பக்தி கொண்டு இருந்தார்। அவர் சமய தத்துவ சாத்திரங்களில் தேர்ச்சி பெற்று விளங்கியதால் இவர் பட்டர் என்று அழைக்கப்பட்டார்। அவர் தமிழ் மற்றும் வடமொழி இரண்டிலும் வல்லவராகவும் விளங்கினார்। அவருக்கு பார்க்கும் இடமெல்லாம் எம் அம்மையின் வடிவாகவே தோன்றியது। ஒரு முறை சரபோஜி மன்னர் தை அமாவாசையன்று திருக்கடவூர் கோயிலுக்கு வந்தார்। நிஷ்டையிலிருந்த பக்தரை நோக்கி 'இன்று என்ன திதி?` என்று கேட்டார்। அன்னையின் முழுநிலவு போன்ற திருமுகத்தையே மனக்கண்ணால் கண்டுகொண்டிருந்த அவர், தை அமாவாசையைப் பௌர்ணமி திதி என்று சொல்லிவிட்டார்। . உடனே அரசன் அது "மதி கெட்ட தினம்" ( சந்திரன் தோன்றாத தினம் அதாவது அமாவாசை, சுப்ரமணியருக்கு அறிவு கெட்ட தினம்) என்று பட்டரை நோக்கி சிலேடையாகக் கூறி இன்று நீர் முழு நிலவை காட்டக் கூடுமோ? என்றார். பட்டரும் அதற்கு உடன்பட்டார். பட்டரின் இந்த கூற்றினால் கோபம் கொண்ட மன்னன் இன்று இரவு முழு நிலவு தோன்றவில்லை என்றால் உமக்கு சிரச்சேதம் என்று கட்டளையிட்டார். அன்னையின் அருளின் மேல் முழு நம்பிக்கை கொண்டிருந்த பட்டர் அசரவில்லை.திருக்கடவூர் இறைவியாகிய அபிராமியின் அருள் விளையாடலோ அதியற்புதமான விளையாடல். தன்னையே, தான் வேறு தன் பக்தன் வேறல்ல என்று உலகுக்கு உணர்த்தத் திருவுள்ளம் கொண்டாள் அரசரின் கட்டளைப்படி சிறையிலிருந்து அக்னி குண்டம் அமைத்து அதன் மேல் நிறுவிய சங்கிலித் தொடரில் 100 பலகைகள் கொண்ட ஊஞ்சலை அமைத்து அதில் அமர்ந்து அபிராமி அந்தாதியை கள்ள வாரண பிள்ளையாரைக் காப்புக்கு அழைத்து துவக்கினார் . ஒவ்வொரு பாடல் முடிந்ததும் ஒரு கயறு சிப்பாய்கள் அறுத்தனர் . 100வது பாடல் முடிந்ததும் நிலவு வராவிட்டால் , நூறு கயரும் அரக்கப் படும் .பட்டரும் அடியில் எரியும் தீயில் விழுந்து உயிரை இழக்க வேண்டும் . அந்தாதியாவது நூலின் ஒவ்வொரு பாடலிலும் இறுதியில் உள்ள எழுத்து, அசை, சொல், சீர், அடி ஆகிய இவற்றுள் யாதேனும் ஒன்று அதற்கு அடுத்த பாடலின் முதலாக வரும்படி அமைத்துப் பாடி, இறுதிப் பாடலின் முடிவும் முதற்பாடலின் தொடக்கமும் ஒன்றாக இணையும்படி மண்டலத்து மாலை போலத் தொடுத்துப் பாடப்பெறும் ஒருவகைச் சிற்றியலக்கியமாகும். உதாரணமாக இந்த அபிராமி அந்தாதியில் 100-வது பாடலானது 'குழையைத் தழுவிய' என்று ஆரம்பித்து 'நெஞ்சில் எப்போதும் உதிக்கின்றவே' என முடிகிறது. அபிராமி அந்தாதியின் முதல் பாடலோ 'உதிக்கின்ற' என ஆரம்பிக்கிறது.முதல் பாடலைப் பார்ப்போம்.உதிக்கின்ற செங்கதிர் உச்சித் திலகம் உணர்வுடையோர்மதிக்கின்ற மாணிக்கம் மாதுளம் போது மலர்க்கமலைதுதிக்கின்ற மின்கொடி மென்கடிக் குங்கும தோயமென்னவிதிக்கின்ற மேனி அபிராமி என்றன் விழுத்துணையே. உச்சித் திலகம் என்பது புருவ மத்தியைக் குறிக்கும். யோகநெறியில் புருவமத்தியை 'ஆக்கினை' என்று சொல்வது வழக்கு. ஐம்புலன்களை கட்டுக்குக் கொண்டுவரும் மையம் 'ஆக்கினை'. சாதாரணமாக திலகம், குங்குமம் இட்டுக்கொள்ளும் இடம் இந்தப் புருவ மத்தியில்தான். ஒன்றைக் குறித்து யோசிக்கும்போதுகூட விரலால் புருவமத்தியைத் தொட்டுக்கொண்டுதான் யோசிக்கிறோம். இதனையே உணர்வுடையோர் மதிக்கின்ற மாணிக்கம் என்கிறார். 'உதிக்கின்ற செங்கதிர்' என்பது சூரியனின் செங்கதிர்களைக் குறிப்பது போல் தோன்றினாலும் - சூரியனின் கதிர்கள் எல்லாவுயிர்களையும் காப்பது போல், இறைவன் எல்லா உயிர்களிலும் உள்ளிருந்து இயக்குகிறான் என்பதை விளக்கவே 'உதிக்கின்ற செங்கதிர் உச்சித் திலகம்' என்றார். அதாவது புருவமத்தியில் தோன்றி நம்மை இயக்குகிறாள் என்பது மறைபொருள். இதனை உணர்ந்தவர்கள் இறையை மாணிக்கமாக மதிக்கின்றனர். எனவே, எனக்கு விழுத்துணையாக அபிராமியைக் கொண்டேன் என்கிறார். அபிராமிபட்டர். அடுத்து ஒரு பாடல்:கொள்ளேன் மனத்தில்நின் கோலம் அல்லா(து) அன்பர் கூட்டந்தன்னைவிள்ளேன் பரசம யம்விரும் பேன்வியன் மூவுலகக்(கு)உள்ளே அனைத்தினுக் கும்புறம்பே உள்ளத் தேவிளைந்தகள்ளே களிக்கும் களியே அளியஎன் கண்மணியே
உன்கோலத்தைத் தவிர மனத்தில் வேறெதையும் நினைக்க மாட்டேன்; அத்தன்மையே எனக்கு அருளுவாய்' என அபிராமியிடம் வேண்டுகிறார். உள்ளத்தில் எழும் சஞ்சலங்கள் சலனங்களுக்கெல்லாம் காரணம் வெளியில் பார்ப்பதால் ஏற்படும் மயக்கங்களே என்பதை 'உள்ளே அனைத்தினுக்கும் புறம்பே உள்ளத்தே விளைந்த கள்ளே' என்ற வரிகள் விளக்குகின்றன. மாயை அகலவேண்டுமெனில் அவளையே தவம் செயயவேண்டுமென சின்னஞ்சிறிய மருங்கினில் சாத்திய செய்ய பட்டும்பென்னம் பெரிய முலையும் முத் தாரமும் பிச்சிமொய்த்தகன்னங் கரிய குழலும் கண் மூன்றும் கருத்தில் வைத்துத்தன்னஞ் தனியிருப் பார்க்கிது போலும் தவமில்லையே
என மேற்கூறிய பாடலின் வாயிலாகக் கூறுபவர், அவள் அழகை -அழகுக்(கு) ஒருவரும் ஒவ்வாத வல்லி அருமறைகள்பழகிச் சிவந்த பதாம்புயத் தாள்பனி மாமதியின்குழவித் திருமுடிக் கோமள யாமளைக் கொம்பிருக்கஇழவுற்று நின்றநெஞ் சேயிரங் கேல் உனக்(கு) என் குறையே
என்று வர்ணிக்கும் அதே சமயம், நான் அவள் நினைவிலேயே அவ்விதம் சொன்னேன்। காக்கவேண்டிய அவளே கண்ணை மூடிக்கொண்டிருக்க, நான் உன்னிடம் என்ன சொல்ல வேண்டியிருக்கிறது என தன் அகத்தையே குறை கூறிக்கொள்பவர் பலவாறாக அவள் நாமங்களைப் பாடுவார்। அவள் கண் திறந்தால் நடக்காதது எதுவும் இல்லை என்பதை 78-வது பாடலில்,விழிக்கே அருள் உண்டு அபிராம வல்லிக்கு; வேதம் சொன்ன வழிக்கே வழிபட நெஞ்சு உண்டு எமக்கு; அவ்வழி கிடக்க பழிக்கே சுழன்று, வெம் பாவங்களே செய்து, பாழ் நரகக் குழிக்கே அழுந்தும் கயவர் தம்மோடு, என்ன கூட்டு இனியே?"* என்று அவளது கடைக்கண் பெருமையைக் கூறி, 79-வது பாடலில் 'விழிக்கே அருளுண்டு' என்ற பாடலைத் தொடர்ந்து முடிக்க அன்னை அபிராமி தன் மகன் அபிராமிபட்டருக்காக நிலவை வானில் தவழவிட்டாள்। அதன் பின்னர் அந்தாதியைத் தொடர்ந்து 100 பாடல் பாடி முடித்தார் பட்டர்।தன் தாடங்கத்தை நிலவாக்கி வானவீதியில் தவழவிட்டு பக்தனின் வாய்மொழி மெய்மொழியே என மெய்ப்பித்து பக்தனை அபிராமிபட்டராக்கினாள் அன்னை।அவளையே தவம் செய்த அபிராமிபட்டருக்கு அருள்மழை பொழிந்தாள்। எங்கள் ஊர் புதுச்சேரி வேதபுரிச்வரர் கோயிலில் இன்று இரவு சுமார் 7।30 மணிக்கு இந்த நிகழ்வு , நடத்திக்காட்டப்பெற்றது , விளக்குகள் அனைத்தும் நிறுத்தப் பட்டு 79 ம பாடலில் முழு மதி வானில் தோன்றும் காட்சி நடத்தி காண்பிக்கப் பட்டது அப்போது சுமார் 200 அமைதியாக ஒரே குரலில் அபிராமி அந்தாதியை ஒன்றாக உரத்த குரலில் பாடியப் போது எழுந்த உணச்சி வெள்ளத்தை அனுபவிதவருக்கே அருமை புரியும் ।அதில் தோய்த்து வந்து பின், இந்த பதிவை அன்பர்களுடன் பகிர்ந்து கொள்ள இடுகிறேன் ।அந்தாதி முடிந்த பின் வரும் 101 பாடல் ஆத்தாளை எங்க ளபிராம வல்லியை அண்டமெல்லாம்பூத்தாளை மாதுளம் பூநிறத் தாளைப் புவியடங்கக் காத்தாளை அங்குச பாசங் குசமுங் கரும்பும்அங்கை சேர்த்தாளை முக்கண்ணி யைத்தொழு வார்க்கொரு தீங்கில்லையே
அன்புடன் ,ஏ சுகுமாரன்





















--

Wednesday, January 14, 2009

நெட்டிலே சுட்ட கார்டூன்


Tuesday, January 13, 2009

பொங்கல் வாழ்த்துக்கள்

ஞாயிறு போற்றுதும் ! ஞாயிறு போற்றுதும் !

ஞாலம் முழுதும் ஞானம் பொங்கிட வந்தது இந் நாள் !,

முழுப்பெரும் ஞானம் பூத்திட ,ஆதியில் அமர்ந்த மாயிருள் நீங்கிட வந்தது முதல் "போகி" ,
போகிதனில் போன மாசெல்லாம் பெற்ற இடம் தனில் பொங்கியது புதுப் புனல் ,"பொங்கலேனப்"பெயர்பெற்றே !,
வந்தது புதுப்புது அறிவெல்லாம் , மாறியது வாழ்க்கைபாதை ,

பாதை மாறியது ஞாயிறுக்கு மட்டுமா ?நமக்கும் தானே !
தை பிறந்தால் வழியுன்று புதிதாய் பிறக்குமென்று தைக்கு காத்திருக்கும் தரணியெல்லாம் , இது நம் தமிழ்ர்க்கு தலைமுறை வழக்கமன்றோ ?
வளரட்டும் புதிய பட்டறிவு ! பிறக்கட்டும் புதியப் பாதை !

வளம் தான் பெற்றவுடன் , தன்னை அடுத்துள்ள ஆநிரை செல்வம் அதை பேணிட ஒரு" மாட்டுப் பொங்கல்" ।


மாடு மட்டுமா செல்வம் , தான் அறிந்த மனிதர்களும் செலவம்தானே !அதற்க்கு ஒரு பொங்கல் "காணும் பொங்கல்" !

கண்டிடுவோம் நட்புதனை , பெருக்கிடுவோம் அதன் வலயம் தனை !
மெயயறிவுடன் மேதகு வாழ்வு கிட்டிட , மேன்மையுறு தமிழ் தழைத்திட ,வாழ்தி ! நீ வாழ்தி ! நீ வாழ்தி ! வாழிய அகிலமெல்லாம் ।!அன்புடன் ,ஏ। சுகுமாரன்